Jawaharlal nehru college

தமிழ்த்துறை பற்றிய அறிமுகம்

2016 ஆம் ஆண்டு 30 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இத்தமிழ்த்துறையில் தற்போது 100 மாணவிகள் பயின்று வருகின்றனர் 2016-2019ஆம் கல்வியாண்டில் பயின்ற 30 மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்துறையில் பணிப்புரியும் அனைத்து உதவிப் பேராசிரியர்களும் பல்கலைக் கழகத் தகுதி பெற்ற பேராசிரியர்கள் ஆவர்.

தமிழ்த் துறையின் சிறப்பம்சங்கள்

 • தமிழக அரசுப்பணிகளில் தமிழ்வழிக் கற்றவருக்கு முன்னூரிமை வழங்கப்படுகிறது
 • இந்திய ஆட்சிப்பணி (ஐ ஏ எஸ் ) முன்மைத்தேர்வில் கட்டாய இந்திய மொழித்தாள் வரிசையில் தமிழ்மொழித்தாள் இடம்பெற்றுள்ளது. அதில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே ஐஏஎஸ் தேர்வின் பிற தாள்கள் மதிக்கப்படும்.
 • ஆசிரியர் பணிக்கான TET, TRB தேர்வுகளில் தமிழுக்கும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு(TET,TRB) போன்ற அரசுத்தேர்வுகளில் தமிழுக்கான வாய்ப்பே அதிகமாக காணப்படுகிறது.
 • TNPSC நடத்தும் தேர்வுகளில் தமிழிலிருந்தே செம்பாதி மதிப்பெண்கள் கேட்கப்படுகின்றன. அது மட்டுமன்றி தமிழ் வழியில் கற்றவருக்கே முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது.
 • மொழிபெயர்ப்புத் துறையிலும் படைப்புத்துறையிலும் ஆர்வத்துடன் தமிழ்பயின்ற தகுதி மிக்கவர்களுக்கே வாய்ப்பு. சிறுகதை, கவிதை, நாவல் எழுதுவதற்கு தமிழ் பயின்றவர்களால் மட்டுமே சிறந்து விளங்க முடிகிறது.
 • நல்ல உச்சரிப்புத்திறன் கொண்டவர்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகலாம். தமிழ்க்கண்ணினியம், கலைச்சொல் உருவாக்கம் இணையத்திலும், இணையகளஞ்சியங்களிலும் கட்டுரை எழுதுதல், பிழை திருத்துதல், பிழை திருத்த மென்பொருள் உருவாக்குதல் போன்ற பணி வாய்ப்புகளை பெறலாம்.
 • தமிழ்க் கணினியம் , கலைச்சொல் உருவக்கம் இணையத்திலும் , இணையக்களஞ்சியங்களிலும் கட்டுரை எழுதுதல், பிழை திருத்துதல் , பிழை திருத்த மென்பொருள் உருவாக்குதல் போன்ற பணி வாய்ப்புகள் .
 • அரசுத்துறை நிறுவனங்கள் , நீதிமன்றங்கள் , பாடநூல் கழகம் முதலியவற்றில் மொழிபெயர்ப்பாளர் பிழைதிருத்துணர் முதலிய பணி வாய்ப்புகள் நிறைய உள்ளன.
 • மலேஷியா , சிங்கப்பூர் , பிஜி மாலத்தீவு போன்ற வெளிநாடுகளில் தமிழாசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு.
 • M.A, M.Phil போன்ற பட்ட மேற்படிப்புகளைத் தொடராலாம். SET, NET போன்ற தகுதித்தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்று கல்லூரி பேராசிரியராகலாம் .
 • SET, NET போன்ற தகுதித்தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்று கல்லூரிப் பேராசிரியராகலாம்.
 • திரைப்படத்துறையில் திரைக்கதை, இயக்கம் பாடல் எழுதுதல், வசனம் பேசுதல் போன்ற பல்வேறு துறைகளில் தமிழுக்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுகிறது.

நோக்கம்

ஜவஹர்லால்நேரு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையானது 2016 ஆம் ஆண்டு துவங்கப் பட்டது. நவீன உலகில் தமிழ்மொழி முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே மாணவிகளுக்கு தமிழ்த்தொடர்பான படைப்பாற்றலை வளர்த்தல் மற்றும் அறிவை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு இத்துறை செயல்பட்டு வருகிறது.

குறிக்கோள்

 • அரசுப் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவிகளைத் தயார் செய்தல்..
 • கணினி மயமாக்கப்பட்ட இக்கால கட்டத்திற்கு ஏற்றவாறு இதழியல்துறை, பதிப்புத்துறை, விளம்பரத்துறை, திரைத்துறை, போன்ற துறைகளில் உள்ள வாய்ப்புகளை எடுத்துக் கூறி மாணவிகளை ஊக்கப்படுத்துதல்.
 • படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சு, ஒவியம் போன்ற பல்வேறு போட்டிகளில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பங்குபெறச் செய்தல்.
 • கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினை வளர்க்கும் நோக்கில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.

Activities

S.No. Name of the Activity Date Conducted By
1 Workshop 02.03.2020 Song Writer Pa.Yugabharathi & P.Ravi Kumar, Puducherry University.

துறையின் செயல்பாடுகள்

முத்திமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தி பரிசுகளும் சானறிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் பண்ப்பாட்டுக் கல்விக் கழகத்தின் சார்பில் ஒவவோர் ஆணடும் திருக்குறள் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவவோர் ஆணடும் மாணவிகளுக்கு பாடந் தொடர்பான அறிவை வளர்க்கும் விதத்தில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுபடுக்கிறது.

ஒவவோர் ஆண்டின் இரண்டு பருவங்களிலும் தமிழகத்தின் முன்னோடி பல்கலைக் கழகத்தைச் சாரந்த பேராசிரியர்களைக் கொண்டு சிறப்புச் சொற்பொழிவுகள் நடத்தப் படுகின்றன.

Program Organised

Copyrights @2021 All Rights Reserved.