ஜவாஹர்லால் நேரு மகளிர் கல்லூரியில் முத்தமிழ் இலக்கிய மன்றம் 10.09.2018 அன்று தொடங்கப்பட்டது. புதுவைப் பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் புலமுதன்மையர் பேரா ஆ.திருநாகலிங்கம் அவர்கள் தொடங்கி வைத்து "வாய்மொழி மரபுகள்" என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு கவிதை,கட்டுரை , பேச்சு , ஓவியம், ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
26.2.2019 அன்று இரண்டு சிறப்புச்சொற்பொழிவுகள் நடைபெற்றன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துரையின் தலைவர் பேரா ய. மணிகண்டன் அவர்கள் கலந்து கொண்டு "என்றுமுள தென்றமிழ்" என்னும் தலைப்பிலும் புதுவைப் பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கியப்புலத்தின் உதவிப்பேராசிரியர் முனைவர் பா .இரவிக்குமார் அவர்கள் கலந்துகொண்டு "நவீனக்கவிதைகள் " என்னும் தலைப்பில் உரையாற்றினார் .
கல்லூரியில் பெருந்தலைவர் காமராசர் விழா 12-07-2019 அன்று நடைபெற்றது.
08-08-2019 அன்று சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் புதுவைப் பல்கலைக்கழக ஸ்ரீசங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் உதவிப்பேராசிரியரும் திரைப்படபாடகருமாகிய முனைவர் ப. முருகவேல் அவர்கள் கலந்து கொண்டு "நாட்டுப்புறப்பாடல்கள் " என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
"பெண்கல்வி " குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி 14.08.2019 அன்று நடத்தப்பட்டது.
பெயர்கள் | பணி | |
---|---|---|
தலைவர் | இரா.வைதேகி | தமிழ்த்துறைத் தலைவர் |
துணைத்தலைவர் | பா.பாலாமணி | உதவிப் பேராசிரியர் |
செயலாளர் | ம.நிர்மலா | உதவிப் பேராசிரியர் |
செயற்குழு உறுப்பினர்கள் | முனைவர் ப.ஞானமணி | உதவிப் பேராசிரியர் |
கோ.பாக்கியலட்சுமி | உதவிப் பேராசிரியர் | |
முனைவர் வே.சரிதா | உதவிப் பேராசிரியர் | |
த.மகேஸ்வரி | உதவிப் பேராசிரியர் | |
உறுப்பினர்கள் | கல்லூரி மாணவிகள் |
Copyrights @2021 All Rights Reserved.